/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
போடி ரயிலுக்கு உசிலம்பட்டியில் வரவேற்பு
/
போடி ரயிலுக்கு உசிலம்பட்டியில் வரவேற்பு
ADDED : மார் 21, 2026 05:56 AM
உசிலம்பட்டி: வாரத்தில் 3 நாட்கள் இயக்கப்பட்ட மதுரை - -போடி ரயில் 6 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை தவிர மற்ற நாட்களில் சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 10:30 மணிக்கு புறப்பட்டு காட்பாடி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, தேனி வழியாக மறுநாள் காலை 8:50க்கு போடி சென்றடையும்.
இதேபோல் போடியில் இருந்து இரவு 8:55 மணிக்கு புறப்பட்டு அதே மார்க்கத்தில் மறுநாள் காலை 7:35 க்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும். கூடுதல் நாட்கள் நீட்டிக்கப்பட்ட நிலையில் சென்னையில் இருந்து புறப்பட்டு நேற்று உசிலம்பட்டி வந்த ரயிலை பா.ஜ.,வினர் மாநில செயலாளர் கதலிநரசிங்கப்பெருமாள் தலைமையில் மலர் துாவி வரவேற்றனர். நிர்வாகிகள் தீபன்முத்தையா, சவுந்திரபாண்டி, பிரசாத்கண்ணன் பங்கேற்றனர்.

