ADDED : நவ 10, 2024 04:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவனியாபுரம் : விருதுநகர் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் நேற்று விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை அமைச்சர்கள் சாத்துார் ராமச்சந்திரன், பெரியசாமி,
தங்கம் தென்னரசு, பெரியகருப்பன், ராஜகண்ணப்பன், மூர்த்தி, தளபதி எம்.எல்.ஏ., கலெக்டர் சங்கீதா, மேயர் இந்திராணி பொன்வசந்த், மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார், தி.மு.க., தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன், துணைச் செயலாளர் பாலாஜி வரவேற்றனர்.