ADDED : மார் 18, 2026 04:44 AM
அ நிறம் | அளவு
திருமங்கலம்: ஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்டம் டாங்கி நகர் ட்ரீம்ஸ் யுனிவர்சிட்டியில் இளைஞர்கள் கலாசார பரிமாற்றத் திட்ட நிகழ்ச்சிகள் மார்ச் 10 முதல் 14 வரை நடந்தது.
இதில் தமிழகத்தில் இருந்து 30 மாணவர்கள் பங்கேற்றனர். இதில் திருமங்கலம் அன்னை பாத்திமா கல்லுாரியில் இருந்து 4 பேர் கலந்து கொண்டனர். என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் முனியாண்டி, உடற்கல்வி இயக்குனர் செந்தில்குமார் சென்ற அவர்கள், நேற்று கல்லுாரிக்கு திரும்பினர். அவர்களை தாளாளர் ஷா, பொருளாளர் ஷகிலா, முதல்வர் தபசு கண்ணன் பாராட்டினர்.
