ADDED : மார் 20, 2026 05:00 AM
அ நிறம் | அளவு
மதுரை: தெற்கு ரயில்வே சார்பில் எர்ணாகுளத்தில் இருந்து வேளாங்கண்ணி வரை புதிதாக ரயில் இயக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில் நேற்று காலை 11:00 மணிக்கு மதுரை வந்தது. அந்த ரயிலை பா.ஜ., மாநில செயலாளர் கதலிநரசிங்க பெருமாள் தலைமையில் வரவேற்றனர். ரயிலின் லோகோ பைலட்களுக்கு சால்வை அணிவித்து இனிப்பு வழங்கி கவுரவித்தனர். கோட்ட ரயில்வே பயனாளிகள்சங்க ஒருங்கிணைப்பாளர் ஆழ்வார்ராஜா முன்னிலை வகித்தார். வைகை நதி மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ராஜன், கண்ணதாசன், மங்கலம், ரமணி ரயிலை வழிஅனுப்பி வைத்தனர்.
