ADDED : செப் 26, 2024 05:16 AM
அ நிறம் | அளவு
அவனியாபுரம்: மதுரை வலையங்குளம் அரசு வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட ஆறு ஆரம்ப சுகாதார நிலையங்களில் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெறும் 27 தொழு நோயாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வலையங்குளம் அரசு வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்தது. சட்டை, வேட்டி, சேலை, போர்வை, காலணிகளை டாக்டர் அர்ச்சனா வழங்கினார். துணை இயக்குனர் அலுவலக (தொழுநோய்) மேற்பார்வையாளர்கள் தாமரைக்கண்ணன், சிவக்குமார் கலந்து கொண்டனர்.
சுகாதார நிலைய மேற்பார்வையாளர் முத்துமாயன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அழகுமலை ஏற்பாடுகள் செய்தனர். சுகாதார ஆய்வாளர் தினேஷ்குமார் நன்றி கூறினார்.
