/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை குடியரசு தினவிழாவில் நலத்திட்ட உதவி; கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் கொண்டாட்டம்
/
மதுரை குடியரசு தினவிழாவில் நலத்திட்ட உதவி; கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் கொண்டாட்டம்
மதுரை குடியரசு தினவிழாவில் நலத்திட்ட உதவி; கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் கொண்டாட்டம்
மதுரை குடியரசு தினவிழாவில் நலத்திட்ட உதவி; கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் கொண்டாட்டம்
ADDED : ஜன 27, 2025 05:18 AM

மதுரை: மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் 76 வது குடியரசு தின விழா கலெக்டர் சங்கீதா தலைமையில் நேற்று நடந்தது. தேசிய கொடியை ஏற்றி வைத்த கலெக்டர், போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். தியாகிகளை கவுரவிக்கும் வகையில் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தினார்.
மாவட்ட அளவில் போலீஸ் துறையில் சிறப்பாக பணியாற்றிய 207 பேருக்கும், பிறதுறைகளைச் சேர்ந்த 34 அலுவலர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தென்மண்டல போலீஸ் ஐ.ஜி., பிரேம்ஆனந்த் சின்ஹா, போலீஸ் கமிஷனர் லோகநாதன், எஸ்.பி., அரவிந்தன், கூடுதல் கலெக்டர் மோனிகாராணா, பயிற்சி கலெக்டர் வைஷ்ணவி பால், டி.ஆர்.ஓ., சக்திவேல், ஆர்.டி.ஓ., ஷாலினி உட்பட பலர் பங்கேற்றனர்.
கண்கவர் நிகழ்ச்சிகள்
விழாவில் மதுரை கிரசென்ட் மெட்ரிக்., அனுப்பானடி சவுராஷ்டிரா பெண்கள், செக்கானுாரணி அரசு கள்ளர், லட்சுமிபுரம் டி.வி.எஸ்., திருவேடகம் விவேகானந்தா, எழுமலை பாரதியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள், அரசு ஆதிதிராவிடர் நலநடுநிலைப்பள்ளி ஆகிய 7 பள்ளிகளின் 536 மாணவர்கள் பங்கேற்ற கலைநிகழ்ச்சிகள் நடந்தன.
நலத்திட்ட உதவிகள்
மதுரை கலெக்டர் 42 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முன்னாள் படைவீரர்களுக்கான திட்டத்தில் திருமண மானியமாக ரூ.25 ஆயிரம், மாற்றுத்திறனாளிகள் 5 பேருக்கு ரூ.5 லட்சத்து 9 ஆயிரம் மதிப்பில் பெட்ரோல் ஸ்கூட்டர், தோட்டக்கலைத் துறையின் நீர்வள நிலவள மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.1.77 லட்சம் மதிப்பிலும், வேளாண் துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.10 ஆயிரம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு திட்டத்தில் 25 பேருக்கு ரூ.20 கோடியே 98 லட்சத்து 91 ஆயிரம் மதிப்பில் வீடுகள், மாவட்ட தொழில் மையம் மூலம் 3 பேருக்கு ரூ.1.26 கோடி மதிப்பில் கடனுதவி வழங்கல் என மொத்தம் ரூ.3 கோடியே 43 லட்சத்து, 82 ஆயிரத்து 929 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

