ADDED : ஜன 06, 2025 01:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை; மதுரை ஜவஹர்புரத்தில் நகர் தி.மு.க., மகளிரணி சார்பில் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மாநகராட்சி முன்களப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
மகளிரணி அமைப்பாளர் சரவணபுவனேஸ்வரி தலைமை வகித்தார். நகர் செயலாளர் தளபதி நலத்திட்டங்களை வழங்கி பேசினார். முன்னாள் அமைச்சர் பொன்முத்துராமலிங்கம், முன்னாள் மேயர் குழந்தைவேலு உள்பட பலர் பேசினர். நகர், வட்ட, பகுதி செயலாளர்கள், கவுன்சிலர்கள், மகளிரணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

