ADDED : மார் 05, 2024 05:10 AM
அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம், : மதுரை அ.தி.மு.க., கிழக்கு மாவட்டம் சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் பொதுக்கூட்டம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தனக்கன்குளம் பி.ஆர்.சி காலனியில் நடந்தது.
ஒன்றிய செயலாளர் முருகன் தலைமை வகித்தார். இளைஞரணி மாவட்ட செயலாளர் ரமேஷ் முன்னிலை வகித்தார். கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ., நலத்திட்ட உதவிகள் வழங்கினார். எம்.எல்.ஏ., பெரியபுள்ளான், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஒன்றிய பிரதிநிதி மாயி நன்றி கூறினார்.
