நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: டி.கல்லுப்பட்டி வட்டாரத்தில் இயங்கி வரும் நண்பர்கள் வட்டார அமைப்பு சார்பில் ஏழை, எளிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி வருகின்றனர்.
கணவரை இழந்து, ஏழ்மை நிலையில் வசிக்கும் பரமேஸ்வரி, மூன்று வயது மகன் படிப்புக்காக உதவி கேட்டார். இதையடுத்து அமைப்பைச் சேர்ந்த ஓய்வு தலைமை ஆசிரியர் கோவிந்தராமானுஜம், ஓய்வு சுகாதார ஆய்வாளர் சந்திரசேகரன், அரசு பள்ளி ஆசிரியை செல்லம்மாள் மற்றும் அமைப்பின் சார்பில் வாழ்வாதாரத்திற்காக தையல் இயந்திரத்தை அமைப்பின் தலைவர் பாஸ்கரன், செயலாளர் பார்த்திபன், சமூகஆர்வலர் குமார் வழங்கினர்.

