/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மேல அனுப்பானடியில் பாதாளச்சாக்கடை அமைக்க நடவடிக்கை என்ன: கோர்ட்
/
மேல அனுப்பானடியில் பாதாளச்சாக்கடை அமைக்க நடவடிக்கை என்ன: கோர்ட்
மேல அனுப்பானடியில் பாதாளச்சாக்கடை அமைக்க நடவடிக்கை என்ன: கோர்ட்
மேல அனுப்பானடியில் பாதாளச்சாக்கடை அமைக்க நடவடிக்கை என்ன: கோர்ட்
ADDED : நவ 22, 2025 04:32 AM
மதுரை: மதுரை மேல அனுப்பானடி பகுதியில் பாதாளச் சாக்கடை அமைக்க மேற்கொண்ட நடவடிக்கை குறித்து மாநகராட்சி கமிஷனர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மேல அனுப்பானடி ஏ.ஜி.எம். குடியிருப்போர் பொதுநல சங்கம் தலைவர் பாண்டியராஜன் தாக்கல் செய்த மனு: எங்கள் பகுதிக்குட்பட்ட கங்கா நகர், மாருதி நகர், பூம்புகார் நகர், சரவணன் நகர் 2011 ல் மாநகராட்சி யுடன் இணைக்கப்பட்டது.
அடிப்படை வசதிகளை மாநகராட்சி நிர்வாகம் நிறைவேற்றவில்லை. பாதாளச் சாக்கடை திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதற்குரிய டெபாசிட் தொகையை 2011 முதல் மாநகராட்சி நிர்வாகம் வசூலிக்கிறது. சொத்து வரி செலுத்துகிறோம். தெருக்களில் கழிவு நீர் தேங்குகிறது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை செயலர், மாநகராட்சி கமிஷனருக்கு மனு அனுப்பினோம். பாதாளச் சாக்கடை திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதி பி.டி.ஆஷா விசாரித்தார். மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் மணிபாரதி ஆஜரானார்.
நீதிபதி பிறப்பித்த உத்தரவு: பாதாளச்சாக்கடை அமைக்க எத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது, அதன் தற்போதைய நிலை குறித்து மாநகராட்சி கமிஷனர் நவ.25 ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றார்.

