தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/தனுஷ் பின்னால் பா.ஜ., இருப்பதில் என்ன தவறு: திண்டுக்கல் சீனிவாசன் கேட்கிறார்

தனுஷ் பின்னால் பா.ஜ., இருப்பதில் என்ன தவறு: திண்டுக்கல் சீனிவாசன் கேட்கிறார்

தனுஷ் பின்னால் பா.ஜ., இருப்பதில் என்ன தவறு: திண்டுக்கல் சீனிவாசன் கேட்கிறார்


UPDATED : அக் 26, 2026 04:35 PM

ADDED : அக் 26, 2026 04:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 26, 2026 04:35 PM ADDED : அக் 26, 2026 04:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: ‘‘நடிகர் தனுஷை பார்த்து ஆளும்கட்சி பதட்டமடைகிறது. அவரிடம் ஆட்சியை கொடுத்து விடுவார்களோ என்று பதட்டமடைகின்றனர். தனுஷிற்கு பின்னால் பா.ஜ., இருந்தால் என்ன தவறு,’’ என, மதுரையில் அ.தி.மு.க., பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.

அவர் கூறியதாவது: கொலை, கொள்ளை, கற்பழிப்பு, லஞ்சம் அதிகம் நடப்பது இந்த ஆட்சியில் தான். விலைவாசி விண்ணைத் தொடுகிறது. இனிமேல் வாழவே முடியாது. தி.மு.க., -அ.தி.மு.க., சிறப்பான ஆட்சியை கொடுத்தோம். ஆனால் த.வெ.க., ஆட்சியில் அனைத்தும் விலை உயர்ந்துவிட்டது. அரிசி பதுக்கல் தொடங்கிவிட்டது.

நடிகர் தனுஷை பார்த்து ஆளும்கட்சி பதட்டமடைகிறது. அவரிடம் ஆட்சியை கொடுத்து விடுவார்களோ என்று பதட்டமடைகின்றனர். தனுஷிற்கு பின்னால் பா.ஜ., இருந்தால் என்ன தவறு. நாங்கள் பா.ஜ.,வுடன்தான் இருக்கிறோம். எஸ்.ஐ.ஆர்.,ஐ குறை சொல்பவர்கள் அதில் என்ன தவறு என்று நிரூபிக்க வேண்டும்.

அ.தி.மு.க., கொடுத்த 8 கிராம் திட்டத்தை பஷ்பமாக்கிவிட்டு 1 கிராம் கொடுத்துகிட்டு தாய்மாமன் அண்ணன் சீர்வரிசை என்கிறார். ‘டூப்’ வேலை தான் நடக்கபோகுது. அ.தி.மு.க.,வும், த.வெ.க.,வும் ஒன்றுதான் என்று ஆதவ் அர்ஜூனா கூறுகிறார். அப்படியானால் த.வெ.க., பேனரில் எம்.ஜி.ஆர்., ஜெ., படத்தை போடுவார்களா. இவ்வாறு கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us