/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை துணை மேயர் அலுவலக தாக்குதலுக்கு காரணம் என்ன
/
மதுரை துணை மேயர் அலுவலக தாக்குதலுக்கு காரணம் என்ன
ADDED : ஜன 10, 2024 06:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரையில் துணைமேயர் நாகராஜன் அலுவலகத்தின் மீது நேற்று இரு ரவுடிகள் தாக்குதல் நடத்தினர். இதுதொடர்பான போலீஸ் விசாரணையில், லோகேஷ், இஸ்மாயில் ஒரு ஆட்டோவில் வைத்து மது அருந்தியுள்ளனர்.
அங்கு வந்த செல்வா என்பவர், இங்கு மது அருந்தக் கூடாது' என கண்டித்துள்ளார். அதற்கு இருவரும், நாங்கள் அப்படித்தான் செய்வோம். நீ யார் கேட்பதற்கு' என்று கேட்டுள்ளனர். இதற்கு பதிலளித்த செல்வா, துணை மேயரின் உறவினர் நான். இங்கு தவறாக நடக்க அனுமதிக்க முடியாது' என்றார். உடனே துணை மேயராக இருந்தால் என்ன'' என்று கேட்டு ஆயதங்களுடன் துணைமேயர் வீட்டுக்குச் சென்று தாக்கியுள்ளனர் என தெரியவந்தது.

