/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
புதுசா கட்டி ஏழு மாசமாச்சு கடைத் திறப்பு என்னாச்சு
/
புதுசா கட்டி ஏழு மாசமாச்சு கடைத் திறப்பு என்னாச்சு
புதுசா கட்டி ஏழு மாசமாச்சு கடைத் திறப்பு என்னாச்சு
புதுசா கட்டி ஏழு மாசமாச்சு கடைத் திறப்பு என்னாச்சு
ADDED : நவ 05, 2024 05:30 AM

கொட்டாம்பட்டி; கொட்டாம்பட்டி ஒன்றியம் பாண்டாங்குடியில் புதிய ரேஷன் கடை கட்டி முடித்து 7 மாதங்களுக்கு மேலாகியும் பயன்பாட்டிற்கு வராததால் மக்களின் வரிப்பணம்வீணாகிறது.
இங்கு 2021 --22 ஊரக வளர்ச்சி, ஊராட்சிதுறை சார்பில் பொது விநியோகக் கடை ரூ.8.70 லட்சத்தில் கட்டப்பட்டது. இக் கடையில் 350 க்கும் மேற்பட்ட ரேஷன்கார்டு தாரர்கள் உள்ளனர். ஏற்கனவே செயல்பட்ட ரேஷன் கடை சிதிலமடைந்ததால், புதிய கடை கட்டப்பட்டது. இப்பணி முடிந்து ஏழு மாதங்களாகிறது.
இதுவரை திறப்பு விழா நடக்கவில்லை. இதனால் மக்களின் வரிப்பணம் வீணாகிறது. கடையை திறக்காததால் இடப்பற்றாக்குறையால் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கு பதிவு செய்வது ஓரிடத்திலும், பொருட்கள் வினியோகம் சிதிலமடைந்த மகளிர் சுய உதவி குழு கட்டடத்திலும் நடக்கிறது. ரேஷன் பொருட்களுக்காக கார்டுதாரர்கள் திறந்த வெளியில் வெயிலில் காத்துக் கிடக்கின்றனர்.
கார்டுதாரர்களின் நலன் கருதி ரேஷன்கடையை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதுகுறித்து வட்ட வழங்கல் அலுவலர் கார்த்திக்பாபு கூறுகையில், ''விரைவில் ரேஷன் கடை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்'' என்றார்.