/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஐந்து மாதங்களாக தொடர்ந்து தட்டுப்பாடு பதுங்கியதா கோதுமை; மதுரை கூட்டுறவுத்துறை ரேஷன் கடைகளில்

ADDED : ஆக 28, 2025 04:44 AM
ரேஷன் கார்டில் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 6 முதல் 30 கிலோ வரை பச்சரிசி, புழுங்கல் அரிசி, கோதுமை இலவசமாக வழங்கப்படுகிறது.
சுமாராக இருந்தாலும் புழுங்கல் அரிசிக்கு இதுவரை தட்டுப்பாடு வந்ததில்லை.  ஒரு கார்டுக்கு அதிகபட்சமாக 5 கிலோ வரை பச்சரிசி வழங்கலாம் என்றாலும் 2 கிலோவுக்கு மேல் பெரும்பாலான கடைகளில் வழங்குவதில்லை.  மேலும் 5 மாதங்களுக்கு மேலாக கார்டுதாரர்களுக்கு கோதுமை வழங்கவே இல்லை.
ரேஷன் கடை விற்பனையாளர்கள் கூறியதாவது: ஒரு கடைக்கு குறைந்தது 500 முதல் 1000 ரேஷன் கார்டுகள் இருக்கும். ஒரு கார்டுதாரருக்கு  2 கிலோ கோதுமை தர வேண்டும் எனில் மாதம் 1000 முதல் 2000 கிலோ கோதுமை அனுப்ப வேண்டும். ஆனால் மாதந்தோறும்  50 முதல் 200 கிலோ தான் தருகின்றனர். ஒருவருக்கு ஒரு கிலோ என்று வைத்தால் கூட 1000 கார்டுகளுக்கு கொடுப்பதற்கு 5 மாதங்கள் காத்திருக்க வேண்டும்.
வயதானவர்கள், சர்க்கரை நோயாளிகள் கேட்கும் போது முன்னுரிமை அளித்து கோதுமை வழங்குகிறோம் என்றனர்.
கார்டுதாரர்கள் கூறியதாவது: இரண்டு ஆண்டுகளாகவே கோதுமை விநியோகம் சரியில்லை. முன்பு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ஒரு கிலோ கிடைத்தது.
தற்போது  மாதக்கணக்காகிறது. கோதுமைக்காக மட்டும் மாதத்தில் 4 நாட்கள் கடைக்கு அலைய வேண்டியுள்ளது. எப்போது கேட்டாலும் பற்றாக்குறை என்று கடைக்காரர்கள் சொல்கின்றனர். கொஞ்சம் வருவதையும் அவர்களே பதுக்கி வெளிச்சந்தையில் விற்கின்றனரா எனத் தெரியவில்லை. அரிசியின் அளவை குறைத்து விட்டு அதற்கு மாற்றாக கோதுமை வழங்க வேண்டும் என்றனர்.