தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/இரும்பு ஷட்டரை எப்ப சார் பொருத்துவீங்க... பாசன தண்ணீர் வீணாவதாக கவலை

இரும்பு ஷட்டரை எப்ப சார் பொருத்துவீங்க... பாசன தண்ணீர் வீணாவதாக கவலை

இரும்பு ஷட்டரை எப்ப சார் பொருத்துவீங்க... பாசன தண்ணீர் வீணாவதாக கவலை


UPDATED : அக் 04, 2026 12:00 AM

ADDED : அக் 03, 2026 04:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 04, 2026 12:00 AM ADDED : அக் 03, 2026 04:44 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மேலுார்:

மருதுார் கண்மாயிலிருந்து திருவாதவூர் கால்வாயில் செல்லும் தண்ணீரால் நிரம்பும் துாங்கனேந்தல் கண்மாய் மடையில் இரும்பு ஷட்டர் இல்லாததால் பாசனத்திற்கு தண்ணீர் சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மருதுார் கண்மாயிலிருந்து 4 கி.மீ., தொலைவில் உள்ள திருவாதவூருக்கு 4 ஏ கிளை கால்வாய் வழியாக தண்ணீர் செல்கிறது. இதில் 2வது மடை வழியாக செல்லும் தண்ணீரால் 17 ஏக்கர் பரப்பளவில் உள்ள துாங்கனேந்தல் கண்மாய் நிரம்பி அதன் மூலம் ஏராளமான ஏக்கர் பாசனம் பெறும். கண்மாய் நிரம்பிய பிறகு ஷட்டரால் மூடப்படும். அதன் பிறகு விவசாயிகள் தேவைக்கு ஏற்ப குறிப்பிட்ட நாட்கள் தண்ணீர் பாய்ச்சுவர். பிறகு வயலை காய விட்டு பாய்ச்சுவர். இவ்வாறு பாய்ச்சலும் காய்ச்சலும் முறையில் பாசனத்திற்கு தண்ணீர் பயன்படுத்தப்படும். ஆனால் 2 ஆண்டுகளுக்கு முன் மடையின் இரும்பு ஷட்டர் சிதிலமடைந்ததால் நீர்வளத்துறை அதிகாரிகள் கழற்றியதோடு சரி. இதுவரை பொருத்தவில்லை.

அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: ஷட்டர் இல்லாததால் கண்மாயில் தண்ணீரை சேமிக்க முடியாமல் தண்ணீர் வெளியேறுகிறது. கடந்த ஆண்டு கண்மாயிலிருந்து தண்ணீர் தேவையில்லாத நேரத்தில் வயலுக்குள் பாய்ந்து பயிர்கள் அழுகின. பாசனத்திற்கு பற்றாக்குறை ஏற்பட்டது. மடை அருகே ஏற்பட்டுள்ள பெரிய பள்ளத்தின் வழியாகவும் தண்ணீர் வெளியேறி வீணாகியது. இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரியிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. மாவட்ட நிர்வாகம் ஷட்டரை மீண்டும் பொருத்தவும், பள்ளத்தை சரி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us