தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/சுகாதார நிலையம் எப்போது திறப்பு

சுகாதார நிலையம் எப்போது திறப்பு

சுகாதார நிலையம் எப்போது திறப்பு


UPDATED : நவ 17, 2026 07:07 PM

ADDED : நவ 17, 2026 07:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 17, 2026 07:07 PM ADDED : நவ 17, 2026 07:02 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாலமேடு: ‘வலையபட்டியில் புதிதாக கட்டிய துணை சுகாதார நிலையத்தை விரைந்து திறக்க வேண்டும்’ என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர்.

இங்குள்ள ஊராட்சி அலுவலகம் அருகே 15 ஆவது நிதி குழு மானியத்தில் ரூ.45 லட்சம் செலவில் துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டது. பணிகள் முடிந்து 6 மாதங்களாகியும் திறப்பு விழா காணாததால், காட்சிப் பொருளாகவே உள்ளது. தற்போது ஊராட்சி அலுவலக கட்டடத்தில் சிறிய அறையில் செவிலியர்கள் சிரமத்துடன் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கின்றனர்.

அப்பகுதி செல்லச்சாமி கூறியதாவது: சுகாதார நிலைய கட்டுமான பணிகள் 6 மாதத்திற்கு முன்பே முடிந்து விட்டது. 'போர்வெல்', 'காம்பவுண்ட்', முன்பகுதியில் தளம் இன்னும் அமைக்கப்படவில்லை. இதனால் கரடு, முரடாகவே காட்சியளிக்கிறது. தெரு நாய்கள் ஓய்வெடுக்கவும், சமூகவிரோதிகள் மது அருந்தவும் பயன்படுகிறது. ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுத்து திறக்க வேண்டும் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us