UPDATED : நவ 22, 2026 11:21 PM
ADDED : நவ 22, 2026 06:27 PM

அ நிறம் | அளவு
வாடிப்பட்டி: வாடிப்பட்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டு காட்சிப்பொருளாகி வரும் பொதுசுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இங்கு துாய்மை பாரத இயக்கம் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.13.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக பொது சுகாதார வளாகம் கட்டப்பட்டது. பணிகள் முடிந்து பல மாதங்களாகியும் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் காட்சிப்பொருளாக மாறி வருகிறது. இதனால் மருத்துவமனைக்கு வருவோர் சிரமமடைகின்றனர். அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சுகாதார வளாகத்தை திறக்க வேண்டுமென அப்பகுதியினர் வலியுறுத்துகின்றனர்.
