sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 பால் திரண்டு வரும் போது: ஆவினுக்கு பல ஆயிரம் லிட்., கொள்முதல் குறைந்தது: மாடுகளை தாக்கும் காணை நோய் அதிகரிப்பால்

/

 பால் திரண்டு வரும் போது: ஆவினுக்கு பல ஆயிரம் லிட்., கொள்முதல் குறைந்தது: மாடுகளை தாக்கும் காணை நோய் அதிகரிப்பால்

 பால் திரண்டு வரும் போது: ஆவினுக்கு பல ஆயிரம் லிட்., கொள்முதல் குறைந்தது: மாடுகளை தாக்கும் காணை நோய் அதிகரிப்பால்

 பால் திரண்டு வரும் போது: ஆவினுக்கு பல ஆயிரம் லிட்., கொள்முதல் குறைந்தது: மாடுகளை தாக்கும் காணை நோய் அதிகரிப்பால்


ADDED : நவ 29, 2025 05:11 AM

Google News

ADDED : நவ 29, 2025 05:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாவட்டத்தில் உள்ள ஆவின் பால் உற்பத்தி யாளர்களிடமிருந்து நாள் ஒன்றுக்கு 1.80 லட்சம் லிட்டருக்கு மேல் கொள்முதல் செய்யப்படுகிறது. சில நாட்களாக கொள்முதல் குறைய துவங்கியது.

இதனால் அதிர்ச்சி யடைந்த அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, உசிலம்பட்டி, செல்லம்பட்டி, திருமங்கலம், சேடபட்டி உள்ளிட்ட பகுதிகளில் மாடுகளை காணை நோய் தாக்கியுள்ளது தெரிய வந்தது.

இதனால் மாடுகளுக்கு வாய், காம்புகளில் புண் ஏற்பட்டு இரை உண்ணமுடியாமல் தவிக்கின்றன. இதனால் ஒரு வாரமாக ஆவினுக்கான பால் கொள்முதல் பல ஆயிரம் லிட்டர் குறைந்துவிட்டது. விற் பனையும் பாதித்துள்ளது.

ஆவின் பால் உற்பத்தியாளர்கள் கூறியதாவது:

மாவட்டத்தில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மாடுகள் வளர்க்கப் படுகின்றன. இதில் கிடைக்கும் பால் பெரும்பாலும் ஆவினுக்கு தான் வழங்கப் படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மாடுகள் இருப்பிடத்திற்கே சென்று கால்நடை பராமரிப்புத் துறை அலுவலர்கள் இரண்டு முறை காணை நோய் தடுப்பூசி செலுத்துவர்.

ஆனால் இந்தாண்டு பெரும்பாலான பகுதிகளில் இந்த தடுப்பூசி செலுத்தவில்லை என புகார் எழுந்தது. இதனால் மழைக்காலம் துவக்கத்தில் மாடுகளை காணை நோய் தாக்கியுள்ளது. இதில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. மாடுகளை நோய் தாக்கியதால் பால் உற்பத்தியும் கணிசமாக குறைந்துவிட்டது. தடுப்பூசி செலுத்தி மாடுகளை பாதுகாக்க வேண்டும் என்றனர்.

கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் ராம்குமார் கூறுகையில், ''இது ஒருவகை வைரஸ் நோய். மழைக்காலத்தில் மாடுகளை தாக்கும். உசிலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இந்நோய் தாக்கம் இருப்பது தெரியவந்து உள்ளது. முறையாக தடுப்பூசி செலுத்தப் படுகிறது. ஏற்கனவே ஜூலையில் 2 லட்சம் மாடுகளுக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளோம். அடுத்ததாகவும் செலுத்த உள்ளோம்'' என்றனர்.






      Dinamalar
      Follow us