ADDED : மே 13, 2026 03:26 AM

அ நிறம் | அளவு
கொட்டாம்பட்டி: அய்யாபட்டி ஊராட்சி மலம்பட்டியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இக் கிராம மக்கள் குளிக்க, துவைக்க மலம்பட்டி விலக்கு மற்றும் ஆலங்கண்மாய் உள்ளிட்ட 2 இடங்களில் ஆழ்குழாய், தொட்டி அமைத்துள்ளனர். ஏழு மாதங்களுக்கு முன் மோட்டார் பழுது, தொட்டியின் கீழ் பகுதி சிதிலமடைந்து தண்ணீர் வீணாகியதால் 2 தொட்டிகளும் பயன்பாடு இல்லாமல் புதர் மண்டி காணப்படுகிறது.
அதனால் வெகு தொலைவில் உள்ள கண்மாய்க்கு செல்ல வேண்டியுள்ளது. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு குளியல் தொட்டிகள், மோட்டாரை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.
