/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அலங்காநல்லுாரில் புதிய பஸ் ஸ்டாண்ட் திறப்பு எப்போது
/
அலங்காநல்லுாரில் புதிய பஸ் ஸ்டாண்ட் திறப்பு எப்போது
அலங்காநல்லுாரில் புதிய பஸ் ஸ்டாண்ட் திறப்பு எப்போது
அலங்காநல்லுாரில் புதிய பஸ் ஸ்டாண்ட் திறப்பு எப்போது
ADDED : ஜன 01, 2025 06:24 AM

அலங்காநல்லுார்: அலங்காநல்லுாரில் வணிக வளாகத்துடன் கட்டப்பட்ட பஸ் ஸ்டாண்ட் மாதங்கள் பல கடந்தும் திறக்கப்படாமல் உள்ளது.
கடந்த 2023 செப். 4ல் ரூ.1.50 கோடியில் புதிய வணிக வளாகம், கழிப்பறைகள் கட்ட பூமி பூஜை நடந்தது. கட்டுமான பணிகளை 4 மாதத்தில் முடிக்க வேண்டும் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்திருந்தார். பஸ் ஸ்டாண்டுக்கு தேவையான கூடுதல் இடம் தொடர்பாக பணிகள் தாமதமானது. தற்போது சில மாதங்களுக்கு முன்பே கட்டுமான பணிகள் முடிந்தும் இன்று வரை திறக்கப்படவில்லை.
வணிக வளாகத்தை சமூக விரோதிகள் 'பாராக' பயன்படுத்துவதுடன், மது பாட்டில்களை உடைத்துச் செல்கின்றனர். கழிப்பறை திறக்கப்படாததால் பின் பகுதியை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். இதனால் சுகாதாரம் பாதிக்கிறது. மழை நேரம் சிறுநீர் உள்ளிட்ட கழிவுகள் பஸ் ஸ்டாண்ட் பகுதிக்குள் அடித்துச் செல்லப்படுகிறது. எனவே பஸ் ஸ்டாண்டை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பேரூராட்சி நிர்வாகம் தரப்பில், ''சிறு சிறு வேலைகள் மட்டும் உள்ளது. அவை முடிந்தவுடன் விரைவில் பஸ் ஸ்டாண்ட் திறக்கப்பட உள்ளது'' என்றனர்.

