ADDED : பிப் 03, 2026 06:30 AM

அ நிறம் | அளவு
சோழவந்தான்: சோழவந்தான் அருகே அய்யப்ப நாயக்கன்பட்டியில் ரோடு அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலி யுறுத்தியுள்ளனர்.
அப்பகுதி தருமர் கூறியதாவது:
தேவர் காலனி பெருமாள்கோயில் ரோட்டில் ஏராளமானோர் வசிக் கின்றனர். ஒரு மாதத்திற்கு முன்பு 2 கி.மீ., ரோடு அமைக்க பழைய தார்ரோடு அகற்றப்பட்டது. உடனே புதிய ரோடு அமைக்காததால் மேடு, பள்ளமாகி வாகனங்களிலும், நடந்து செல்லவும் சிரமம் ஏற்படுகிறது.
முதியோர்கள், பெண்கள், குழந்தைகள் பலர் தடுமாறி விழுந்து காய மடைகின்றனர். இரவில் விளக்குகள் இல்லாமல் டூவீலரில் செல்வோர் விழுந்து விபரீதம் ஏற்படும் வாய்ப்புள்ளது. ஒன்றிய நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். அதிகாரிகளிடம் கேட்டபோது, 'விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.
