ADDED : ஜன 06, 2026 06:26 AM

சோழவந்தான்: கச்சிராயிருப்பில் கட்டப்பட்டு திறக்கப்படாத குடிநீர் தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர்.
செந்தில்: இங்கு நாடக மேடை அருகே மத்திய அரசின் ஜல்ஜீவன்மிஷன் 2022--23 திட்டத்தின் கீழ் ரூ.16.75 லட்சம் மதிப்பீட்டில் 12 மீ. உயரம், 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி ஓராண்டுக்கு முன்பு கட்டப்பட்டது. தற்போது வரை பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் காட்சிப் பொருளாக உள்ளது. சிறுவர்கள், இளைஞர்கள் தொட்டியின் மேல் ஏறி விளையாடுகின்றனர். சட்ட விரோத செயல்கள், அசம்பாவிதம் நடக்க வாய்ப்புள்ளது. நேரடியாக மோட்டாரில் இருந்து தண்ணீர் வழங்கப்படுவதால் அடிக்கடி மோட்டார் பழுதாகி தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் தேக்கி வைத்து பயன்படுத்தலாம். ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
