தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/த.வெ.க., ஆட்சியில் வளர்ச்சி திட்டங்கள் எங்கே: உதயகுமார் கேள்வி

த.வெ.க., ஆட்சியில் வளர்ச்சி திட்டங்கள் எங்கே: உதயகுமார் கேள்வி

த.வெ.க., ஆட்சியில் வளர்ச்சி திட்டங்கள் எங்கே: உதயகுமார் கேள்வி


UPDATED : நவ 11, 2026 05:11 PM

ADDED : நவ 11, 2026 05:08 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 11, 2026 05:11 PM ADDED : நவ 11, 2026 05:08 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: ‘ஆறு மாதங்களில் 2993 டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. திட்டங்கள் ரத்து, அரசாணை ரத்து, டெண்டர் ரத்து என த.வெ.க., அரசு ஒரு ரத்து அரசாக உள்ளது’ என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் கூறினார்.

மதுரையில் அவர் கூறியதாவது: த.வெ.க., ஆட்சியில் வளர்ச்சித் திட்டங்கள் எங்கே போயின. 6 மாதங்களில் 2993 அரசு டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பல திட்டங்களின் மதிப்பீடு தேவையின்றி அதிகமாக நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும், அரசு கஜானாவிற்கு ஏற்படும் வீண் விரயத்தை தடுக்கவும் மறுஆய்வு நடத்தப்படுவதாகவும் அரசு விளக்கம் அளித்தாலும், 2993 டெண்டர்கள் ரத்தால் பல துறைகளின் பணிகள் ஸ்தம்பித்துப் போயிருக்கின்றன. வளர்ச்சித் திட்டங்கள் தடுமாறி கொண்டிருக்கின்றன.

த.வெ.க., ஆட்சியின் 6 மாதம், தமிழகத்தை 6 ஆண்டு பின்னோக்கி கொண்டு சென்றுள்ளது. ஏன் இந்த டெண்டர் ரத்து, வாபஸ் வாங்கப்பட்டது போன்றவை குறித்து முதல்வர் விஜய் வாய் திறப்பதில்லை.

த.வெ.க., அரசு ஒரு ரத்து அரசாக இருக்கிறது. திட்டங்கள் ரத்து, அரசாணை ரத்து, டெண்டர் ரத்து, ஒட்டுமொத்தத்தில் மக்களுடைய மகிழ்ச்சி ரத்து என்பது இந்த அரசின் சாதனை. இவ்வாறு கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us