ADDED : பிப் 27, 2024 07:06 AM

அ நிறம் | அளவு
திருமங்கலம், : திருமங்கலம் ஒன்றியம் சாத்தங்குடி ஊராட்சி போல்நாயக்கன் பட்டி செல்லும் வழியில், வயல்வெளிகளில் பெய்யும் மழை நீர் வீணாகாமல் இருப்பதற்காக ரோட்டோரம் தடுப்பணை கட்டப்பட்டு உள்ளது. மழைக்காலங்களில் இந்த வாய்க்காலில் தேங்கும் தண்ணீர் விவசாயப் பணிகளுக்கும் உதவும்.
நிலத்தடி நீர்மட்டமும் உயரும். ஆனால் இந்த வாய்க்கால் துார்வாரி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்நிலையில் கால்வாய் இருப்பதற்கான தடமே பல இடங்களில் இல்லை. சில இடங்களில் வீடுகள் கட்டப்பட்டு, அதற்கான பாதை வாய்க்காலை மறைத்து அமைக்கப்பட்டுள்ளது. எனவே ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வாய்க்கால்களை மீண்டும் சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
