ADDED : ஜன 02, 2025 05:18 AM
திருநகர்: திருநகர் சந்தோஷ் பிசியோதெரபி கல்லுாரியில் வெள்ளை கோட் வழங்கும் விழா நடந்தது. தாளாளர் நோவா தலைமை வகித்து பேசியதாவது: மருத்துவத்துறையை சார்ந்தவர்கள் நுாறு ஆண்டுகளாக வெள்ளை கோட் அணிந்து சேவை செய்கின்றனர்.
வெள்ளை என்பது நோயாளிகளுக்கு சேவை செய்யும் பொழுது துாய்மை உள்ளத்தோடு செயல்படும் புனிதத்தை குறிக்கிறது. முதன் முதலாக சிகாகோ பல்கலையில் 1989ல் 'வைட் கோட் செரிமோனி' நிகழ்வு மருத்துவ மாணவர்களுக்காக உருவாக்கப்பட்டது. அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது.
மாணவர்கள் படிக்கும் போதே வெள்ளை கோட்டின் புனிதத்தை புரிந்து கொண்டு துாய்மை உள்ளத்தோடு மருத்துவ சேவை புரிய வேண்டும் என்றார்.
கல்லுாரி சார்பில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வெள்ளை கோட் வழங்கப்பட்டது. இரண்டாம் ஆண்டு மாணவர்கள் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். பேராசிரியர் கிறிஸ்பு ஜெபராஜ் நன்றி கூறினர்.

