/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
‛'கிளாமர்' காளி கொலையில் ‛'வெள்ளை' காளி ஆஜர்
/
‛'கிளாமர்' காளி கொலையில் ‛'வெள்ளை' காளி ஆஜர்
ADDED : ஏப் 22, 2025 05:42 AM

திருமங்கலம்: மதுரையில் 22 ஆண்டுகளாக தொடரும், பழிக்குப்பழியாக நடந்த கொலைகளில் ஒன்றான 'கிளாமர்' காளி கொலை வழக்கில் நேற்று திருமங்கலம் கோர்ட்டில் ரவுடி 'வெள்ளை' காளி ஆஜர்படுத்தப்பட்டார்.
மதுரையில் தி.மு.க., மாநகராட்சி முன்னாள் மண்டல தலைவர் வி.கே. குருசாமிக்கும், மாநகராட்சி அ.தி.மு.க., முன்னாள் மண்டல தலைவர் ராஜபாண்டி தரப்பிற்கும் இடையேயான 22 ஆண்டுகள் பழிக்குப்பழி அரசியலில் இருதரப்பிலும் தொடர்பு கொலைகள் நடந்து வருகின்றன.
மார்ச் 22ல் தனக்கன்குளத்தில் வி.கே. குருசாமியின் சகோதரி மகன் 'கிளாமர்' காளி 32, கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் 'மூளையாக' செயல்பட்ட ராஜபாண்டி தரப்பைச் சேர்ந்த 'வெள்ளை' காளி, அவரது தாயார் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
வேறு வழக்குகளில் புழல் சிறையில் உள்ள 'வெள்ளை' காளியை மதுரை ஆஸ்டின்பட்டி போலீசார் நேற்று திருமங்கலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை நாளை(ஏப்., 23) மீண்டும் ஆஜர்படுத்த நீதிபதி செல்வகுமார் உத்தரவிட்டார். இதைதொடர்ந்து அவரை திண்டுக்கல் மாவட்ட சிறைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.