ADDED : ஆக 27, 2025 07:01 AM
அ நிறம் | அளவு
திருமங்கலம் : திருமங்கலம் பசும்பொன் தெரு பாண்டி 60, இவரது மனைவி விஜயா 57, இவர்களுக்கு 2 மகள், ஒரு மகன் உள்ளனர். அனைவரும் திருமணமாகி தனியே வசிக்கின்றனர். முப்பது நாட்களுக்கு முன்பு விஜயா உடல் நலக் குறைவால் உயிரிழந்தார். இந்நிலையில் 30 நாட்கள் முடிவடைந்ததால் குடும்பத்தினர் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றனர்.
மனைவி இறந்த சோகத்தில் இருந்த பாண்டி, வீட்டில் யாரும் இல்லாத நிலையை பயன்படுத்தி, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரிக்கின்றனர்.
