ADDED : பிப் 01, 2024 04:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை மதிச்சியத்தைச் சேர்ந்தவர் கவிதா 34. இவரது கணவர் நாகராஜ். திருப்பரங்குன்றத்தில் குடியேறுவது குறித்து இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
இந்நிலையில் மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக அரசு மருத்துவமனையில் கவிதாவை நாகராஜ் அனுமதித்தார்.
சிகிச்சை பலனின்றி கவிதா இறந்தார். பிரேத பரிசோதனையில் அவர் உடலில் காயம் இருந்தது. முதற்கட்ட விசாரணையில் கொலை செய்துவிட்டு நாகராஜ் நாடகமாடியது தெரிந்தது. அவரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.