/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இங்கேயுமா..: ரயில்களில் டிக்கெட் இல்லாதோர் ஆக்கிரமிப்பு: முன்பதிவு பெட்டிகளில் பயணிப்பவர்கள் தவிப்பு
/
இங்கேயுமா..: ரயில்களில் டிக்கெட் இல்லாதோர் ஆக்கிரமிப்பு: முன்பதிவு பெட்டிகளில் பயணிப்பவர்கள் தவிப்பு
இங்கேயுமா..: ரயில்களில் டிக்கெட் இல்லாதோர் ஆக்கிரமிப்பு: முன்பதிவு பெட்டிகளில் பயணிப்பவர்கள் தவிப்பு
இங்கேயுமா..: ரயில்களில் டிக்கெட் இல்லாதோர் ஆக்கிரமிப்பு: முன்பதிவு பெட்டிகளில் பயணிப்பவர்கள் தவிப்பு
ADDED : ஜன 17, 2026 05:41 AM

மதுரை: ரயில்களில் டிக்கெட் இல்லாதவர்கள் முன்பதிவு பெட்டிகளில் ஏறி ஆக்கிரமித்துக் கொள்வதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். பாதுகாப்பு போன்ற காரணங்களுக்காக ரயில்களில் பயணம் செய்வதை பலரும் விரும்புகின்றனர். இதற்காக பயணங்களை முன்கூட்டியே திட்டமிட்டு டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். அவசர காலத்தில் பயணம் மேற்கொள்ள விரும்புவோர் தட்கல், பிரீமியம் தட்கலில் கூடுதல் தொகை செலுத்தி முன்பதிவு செய்து முறையாக பயணிக்கின்றனர்.
ஆனால் சிலர் டிக்கெட் இன்றியும், வகுப்பு மாறியும் பயணிப்பது அதிகரித்து வருகிறது. முன்பதிவு பெட்டிகளில் கூட்டமாக ஏறி பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர். இதனால் 'பெர்த்'களில் படுக்க முடியாமலும், கழிப்பறைக்கு செல்ல முடியாமலும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். டிக்கெட் பரிசோதகரிடம் முறையிட்டால் அவருடனும் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.
குறிப்பாக வெளிமாநிலங்களுக்கு செல்லும் ரயில்களில் இப்பிரச்னைகளால் முன்பதிவு செய்யப்பட்ட பயணிகள் கடும் அசவுகரியத்திற்கு உள்ளாகின்றனர். கழிப்பறை அருகே படுத்துக் கொள்வதாலும், போதை பொருட்களை பயன்படுத்துவதாலும் பெண்கள், முதியவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.இரவில் ஆழ்ந்த துாக்கத்தில் உடைமைகளை திருடுவதும் அரங்கேறுகிறது. எனவே முன்பதிவு பெட்டிகளில் டிக்கெட் இல்லாதோர் பயணிப்பதை தடுக்க ரயில்வே போலீசாரும், பாதுகாப்பு படையும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தெற்கு ரயில்வே பயணிகள் சங்க பொதுச்செயலாளர் பத்மநாதன் கூறியதாவது: 1976 முதல் 1986 வரை ரயில்வே வாரியத்தால் சோதனைக் குழு அமைக்கப்பட்டு டிக்கெட் பரிசோதிக்கும் முறை சிறப்பாக செயல்பட்டது. இதனால் ரயில்களில் ஒருவர் கூட டிக்கெட் இன்றி செல்ல முடியாது. அதுபோன்ற அமைப்பை மீண்டும் நடைமுறைபடுத்த வேண்டும். கூடுதல் பொதுப் பெட்டிகளை இணைக்க வேண்டும். இதன்மூலம் வருமானம் பெருகுவதுடன் பயணிகள் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும் என்றார்.

