தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு நடவடிக்கை எடுக்குமா மேலுார் நகராட்சி

 பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு நடவடிக்கை எடுக்குமா மேலுார் நகராட்சி

 பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு நடவடிக்கை எடுக்குமா மேலுார் நகராட்சி


ADDED : மார் 06, 2026 05:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 06, 2026 05:22 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மேலுார்: மேலுாரில் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு அதிகரித்துள்ளதால், சுற்றுச்சூழலை பாதுகாக்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்நகராட்சியின் 27 வார்டுகளில் லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்ற னர். இவர்கள் தங்களின் அன்றாடத் தேவைக்கு மளிகை, காய்கறி, ஸ்டேஷனரி உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் கடைகளில் பிளாஸ்டிக் பையில் வாங்கிச் செல்கின்றனர். பொருட்களை பயன் படுத்தியதும் பைகளை வீதிகளில் வீசுவதால் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற் படுகிறது. மண், நீர்வளம் பாதிக்கும் வகையில் நிலவளம் பாதிக்கிறது.

சமூக ஆர்வலர் சேவுகமூர்த்தி கூறியதாவது : ஓட்டல்களில் இருந்து சூடான தேநீர் மற்றும் உணவுகளை பிளாஸ்டிக் பையில் வாங்கி பயன்படுத்துவதால் உடல் உபாதைகளுக்கு வாய்ப்பு உள்ளது. உணவுடன் கிடக்கும் பிளாஸ்டிக் பைகளை கால்நடைகள் உண்ண முயற்சிக்கும்போது அவற்றுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. பிளாஸ்டிக் பைகள் மட்காத தன்மை கொண்டவை. எனவே மண் வளம் பாதிப்பதுடன், தண்ணீரை பூமிக்குள் செல்ல விடாமல் தடுக்கிறது. எனவே நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கிறது. கழிவு நீர், பாசன கால்வாயில் தேங்கி அடைப்பை ஏற்படுத்துகிறது. அவற்றை எரிப்பதால் காற்று மாசுபாடு ஏற்படுகிறது.

நகராட்சி அதிகாரிகள் கடைகளில் சோதனை நடத்தி பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து அபராதம் விதிக்க வேண்டும். பிளாஸ்டிக் பை பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார் .

சுகாதார ஆய்வாளர் தினேஷ்குமார் கூறுகையில், ''பிளாஸ்டிக் பை பயன்பாட்டை கட்டுப்படுத்த தொடர்ந்து சோதனை நடத்தி அபராதம் விதிக்கப்படும் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us