விஜய் பிறந்த நாள் விழாவில் ரேஷன் அரிசி வினியோகமா?
விஜய் பிறந்த நாள் விழாவில் ரேஷன் அரிசி வினியோகமா?
ADDED : ஜூன் 30, 2026 05:02 AM
மதுரை: 'மதுரையில் முதல்வர் விஜய் பிறந்த நாள் விழாவையொட்டி, இலவசமாக வழங்க த.வெ.க.,வினருக்கு, 5 டன் ரேஷன் அரிசி கிடைத்தது குறித்து விசாரிக்க வேண்டும்' என, மாவட்ட குறைதீர் நாள் கூட்டத்தில் மனு கொடுக்கப்பட்டது.
மதுரை மாநகராட்சி வார்டு ஒன்று, விளாங்குடி பகுதியில் ஜூன் 24ல் முதல்வர் விஜய் பிறந்த நாள் விழா, மாற்றுக்கட்சியினர் இணையும் விழா ஆகியவை த.வெ.க., சார்பில் நடந்தன; 1,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதாக அறிவித்து, தலா 5 கிலோ அரிசி பையை வழங்கினர்.
அதில், ரேஷன் அரிசி வழங்கப்பட்டதாக அப்பகுதி சமூகநல ஆர்வலர் சிவாஜி என்பவர், மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில், டி.ஆர்.ஓ., அன்பழகனிடம் புகார் தெரிவித்தார்.
இதுகுறித்து, சிவாஜி கூறுகையில், ''அ.தி.மு.க., பிரமுகர் ஒருவர், த.வெ.க.,வில் இணைவதற்கு, விளம்பரத்திற்காக 5 டன் ரேஷன் அரிசியை வழங்கி, முதல்வரின் நற்பெயரை கெடுத்துள்ளார். அவர் மீது வழக்கு பதிந்து, இதை விசாரிக்க வேண்டும்,'' என்றார்.
