/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஆசிரியர்கள் வெளிநாடு செல்ல வாய்ப்பு கிடைக்குமா?
/
ஆசிரியர்கள் வெளிநாடு செல்ல வாய்ப்பு கிடைக்குமா?
ADDED : பிப் 06, 2025 02:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை:ஆசிரியர்கள், அலுவலர்கள் சுற்றுலா, மருத்துவ தேவை, சொந்த விஷயமாக வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டுமென்றால் சம்பந்தப்பட்ட டி.இ.ஓ.,க்கள் வழியாக சி.இ.ஓ., பரிந்துரைத்து சென்னையில் உள்ள இயக்குநரிடம் அனுமதி பெற வேண்டும்.
இதற்காக விண்ணப்பித்து அனுமதி பெறுவதற்குள் மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டிஉள்ளது.
வருவாய் உள்ளிட்ட பிற துறைகளில், அந்தந்த மாவட்ட உயர் அதிகாரிகளே இதற்கான அனுமதியை வழங்குகின்றனர்.
அதுபோல் கல்வித்துறையிலும் மாவட்ட உயர் அதிகாரியான சி.இ.ஓ.,க்களே இந்த அனுமதியை வழங்கும் வகையில் எளிமையாக்க வேண்டும் என, ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.