/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
முள்ளிப்பள்ளத்தில் கால்வாயை துார்வாருவரா
/
முள்ளிப்பள்ளத்தில் கால்வாயை துார்வாருவரா
ADDED : நவ 20, 2025 05:26 AM

சோழவந்தான்: சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் சங்கையாகோயில் அருகே கால்வாயை துார்வார வேண்டுமென அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர்.
இப்பகுதி பண்டாரம் கூறியதாவது: சங்கையாகோயில் அருகே பாசன உபரிநீர் கால்வாய் செல்கிறது. விவசாய நிலங்களில் இருந்து வெளியேறும் உபரிநீர், மழைநீர் இக் கால்வாய் வழியே சென்று வைகையில் கலக்கிறது.
பல ஆண்டுகளாக துார்வாரப்படாமல் குறுகிவிட்டது. குப்பை கொட்டுவதாலும், கழிவுநீர் கலப்பதாலும் கருப்பு நிறமாக சாக்கடையாக மாறி விட்டது.
கால்வாயைச் சுற்றி ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. மழைநீர் செல்ல முடியாமல் குடியிருப்பு களுக்குள் புகுந்து விடுகிறது.
மக்கள் தண்ணீரில் தத்தளிப்பதுடன் பாம்பு, பூரான் உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் நடமாட்டத்தால் அச்சத்தில் வாழ்கின்றனர்.
கால்வாயில் கழிவுநீர் தேங்குவதால் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு நிலவுகிறது.
கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது.
பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

