ADDED : ஜன 23, 2026 06:20 AM

அ நிறம் | அளவு
சோழவந்தான்: சோழவந்தான் அருகே பாலகிருஷ்ணாபுரம் மயானத்தை சீரமைக்க வேண்டும் என அப் பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.
இங்கு பாலகிருஷ்ணாபுரம், நாச்சிகுளம் ரோட்டில் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மயானம் உள்ளது. சுற்றுச்சுவர்களில் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டு விழும் நிலையில் உள்ளது. வளாகம் முழுவதும் செடி, கொடிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு காடு போன்று காட்சியளிக்கிறது.
பாம்பு, பூரான் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள், தெரு நாய்களின் வசிப்பிடமாக மாறிவருகிறது. முன்பு பயன்படுத்தப்பட்ட எரிமேடை சேத மடைந்து எப்போது வேண்டுமானாலும் விழும் நிலை உள்ளது. ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சரி செய்ய வேண்டும்.
