தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ சேதமடைந்த தொட்டி சீரமைக்கப்படுமா 

 சேதமடைந்த தொட்டி சீரமைக்கப்படுமா 

 சேதமடைந்த தொட்டி சீரமைக்கப்படுமா 


ADDED : பிப் 23, 2026 05:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 23, 2026 05:42 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சோழவந்தான்: சோழவந்தான் அருகே பாலகிருஷ்ணாபுரத்தில் சேதமடைந்த மேல்நிலைக் குடிநீர் தொட்டியை சீரமைக்க வேண்டுமென அப்பகுதியினர் வலியுறுத்துகின்றனர். இங்கு 500க்கும் மேற்பட்ட வீடுகளில் ஏராளமானோர் வசிக்கின்றனர். கரட்டுப்பட்டி ரோட்டில் நெல்களத்திற்கு அருகே பல ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டது.

இதன் மூலம் மக்களுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. பலமுறை பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில் கட்டடத்தின் வலிமை குறைந்து பல இடங்களில் காரைகள் பெயர்ந்து கம்பிகள் துருப்பிடித்துள்ளன. மேலும் 'பேஸ்மென்ட்' முழுமையாக சேதமடைந்து ஆபத்தான வகையில் உள்ளது.

இதனால் விபத்து ஏற்பட்டு விபரீதம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சரி செய்ய வேண்டுமென அப்பகுதியினர் வலியுறுத்துகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us