தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ஆபத்து தொட்டி அகற்றப்படுமா

ஆபத்து தொட்டி அகற்றப்படுமா

ஆபத்து தொட்டி அகற்றப்படுமா


UPDATED : அக் 06, 2026 10:10 PM

ADDED : அக் 06, 2026 06:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 10:10 PM ADDED : அக் 06, 2026 06:36 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சோழவந்தான்: காடுபட்டி ஊராட்சி வடகாடுபட்டியில் ஆபத்தான மேல்நிலைத் தொட்டியை அகற்ற வேண்டும்’ என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

இங்கு ரேஷன் கடை அருகே பல ஆண்டுகளுக்கு முன் கட்டிய மேல்நிலை குடிநீர் தொட்டி உள்ளது. தொட்டி சேதமடைந்ததாலும், தேவை அதிகரித்ததாலும் இதனருகே புதிதாக மேல்நிலைத் தொட்டி அமைக்கப்பட்டது. இதனால் பழைய தொட்டி பயன்பாடின்றி கைவிடப்பட்டது.

அத்தொட்டி 10 ஆண்டுகளுக்கும் மேலாக காட்சிப்பொருளாக நிற்கிறது. தொட்டியின் பல இடங்களில் காரை பெயர்ந்து கம்பிகள் தெரிகின்றன. சுற்றுப்புறத்தில் செடி, கொடிகள் அடர்ந்து பாம்பு, பூரான் போன்ற விஷ ஜந்துகளின் வசிப்பிடமாக மாறிவிட்டது. சுற்றிலும் ஏராளமான குடியிருப்புகள், ரேஷன் கடை, அங்கன்வாடி மையம் உள்ளது. தினமும் ஏராளமானோர் இங்கு வருகின்றனர். தொட்டி விழுந்து விபரீதம் விளையுமுன் ஒன்றிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us