UPDATED : அக் 21, 2026 07:11 PM
ADDED : அக் 21, 2026 07:07 PM

அ நிறம் | அளவு
அலங்காநல்லூர்: ‘‘மேலச்சின்னணம்பட்டி ஊராட்சி எல்லப்பட்டியில் சுகாதார வளாகத்தை பராமரிக்க வேண்டும்’’ என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இங்கு அலங்காநல்லுார் மெயின் ரோட்டருகே ரூ.3.50 லட்சம் செலவில் சுகாதார வளாகம் அமைக்கப்பட்டது. சில மாதங்கள் செயல்பட்ட நிலையில் மோட்டார் பழுதால் தண்ணீர் கிடைக்காமல், வளாகம் பயன்பாடின்றி போனது. தற்போது கதவுகள், பைப்லைன்கள் சேதமடைந்து மிகமோசமாக உள்ளது.
வளாகத்தைச் சுற்றிலும் செடி, கொடிகள் அடர்ந்து புதராகவும் விஷ ஜந்துகளின் வசிப்பிடமாக மாறிவிட்டது. இதனால் அப்பகுதியினர் திறந்தவெளியை பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
