ADDED : பிப் 11, 2026 06:37 AM
அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம்: மகாசிவராத்திரி அன்று திருப்பரங்குன்றம் மலைப் பாதையில் மின் விளக்குகள் அமைக்க ஹிந்து மக்கள் கட்சி, அகில பாரத அனுமன் சேனா அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. அனுமன் சேனா மாவட்ட தலைவர் சக்திவேல் தெரிவிக்கையில்,
'திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் பிப்.15 இரவில் மகா சிவராத்திரி வழிபாடு நடைபெறும். பக்தர்களின் வசதிக்காக மலை அடிவாரத்தில் உள்ள பழநி ஆண்டவர் கோயில் தெரு முதல் மலை உச்சி வரை மின் விளக்குகள் அமைக்க வேண்டும். போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும்' என்றார்.
