sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மதுரை காமராஜ் பல்கலையில்  கொட்டிக் கிடக்கு 'பஞ்சாயத்து' தீர்வு காண்பாரா புதிய பதிவாளர்

/

மதுரை காமராஜ் பல்கலையில்  கொட்டிக் கிடக்கு 'பஞ்சாயத்து' தீர்வு காண்பாரா புதிய பதிவாளர்

மதுரை காமராஜ் பல்கலையில்  கொட்டிக் கிடக்கு 'பஞ்சாயத்து' தீர்வு காண்பாரா புதிய பதிவாளர்

மதுரை காமராஜ் பல்கலையில்  கொட்டிக் கிடக்கு 'பஞ்சாயத்து' தீர்வு காண்பாரா புதிய பதிவாளர்

1


ADDED : மார் 04, 2026 06:21 AM

Google News

ADDED : மார் 04, 2026 06:21 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை :மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலைக் கல்வியில் மாணவர் சேர்க்கை சரிவு, சம்பள பிரச்னை, பேராசிரியர், அலுவலர்களின் பதவி உயர்வு, 'கோஷ்டி அரசியல்' என ஏராளமான பிரச்னைகள் தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள பதிவாளர் (பொறுப்பு) முத்தையாவுக்கு சவாலாக உள்ளன.

இப்பிரச்னைகளுக்கு அவர் விரைவாக தீர்வு காண்பாரா என பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இப்பல்கலையில் 10 மாதங்களாக துணைவேந்தர் பணியிடம் காலியாக உள்ளது. பதிவாளர் உட்பட உச்ச பதவிகள் அனைத்திலும் பேராசிரியர்களே கூடுதல் பொறுப்பு வகிக்கின்றனர். மூன்று ஆண்டுகளாக பதிவாளர் பொறுப்பு வகித்த ராமகிருஷ்ணன், பேராசிரியர்கள் பணி மேம்பாடு பிரச்னையை முடிக்காமல் இழுத்தடித்தார்.

இதுபோல் சம்பள பிரச்னை, அலுவலர்கள், இணைவிப்பு கல்லுாரிகளின் கோரிக்கைகளிலும் ஆர்வமின்றி செயல்பட்டதால் கன்வீனர் சுந்தரவள்ளி அவரை பதிவாளர் பொறுப்பில் இருந்து விடுவித்தார்.

25 ஆண்டுகளுக்குப் பின்பு அவருக்கு பதில் அலுவலர்கள் (நான் டீச்சிங்) பிரிவில் சீனியர் இணைப் பதிவாளர் அந்தஸ்தில் உள்ள முத்தையாவுக்கு பதிவாளராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்கு பின் 'நான் டீச்சிங்' பிரிவில் ஒருவர் பதிவாளராக பொறுப்பேற்றுள்ளார். தற்போது தேர்வாணையராக கூடுதல் பொறுப்பு வகிக்கும் இவர், கல்லுாரி தேர்வுகளை சரியான நேரத்தில் நடத்தி முடிவுகளை உடனே வெளியிட்டது போன்ற நடவடிக்கையை மேற்கொண்டு கன்வீனர் சுந்தரவள்ளியின் கவனம் பெற்றார். இதையடுத்து பதிவாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

பேராசிரியர், அலுவலர்கள் கூறியதாவது: தற்போது பிரதான பிரச்னையாக உள்ளது பேராசிரியர்களுக்கான பணி மேம்பாடு. அதற்கு தனிக் கவனம் செலுத்த வேண்டும்.

நான்கு மாதங்களாக சிண்டிகேட் கூட்டம் நடக்காததால் இணைவிப்பு கல்லுாரிகளுக்கு புதிய பாடத்திட்டங்களுக்கான அனுமதி, முதல்வர்கள் நியமன அனுமதி உள்ளிட்டவை கிடப்பில் உள்ளன.

பல்கலை நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதை சரிசெய்ய பல்கலைக்கான வருவாய் இனங்களை மேம்படுத்த வேண்டும். அதிக வருவாய் தரும் தொலைநிலைக் கல்வித் திட்டத்தை சீரமைத்து மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும். அங்கு பேராசிரியர் அலுவலரிடையே ஒருங்கிணைப்பு இல்லை. உரிய நேரத்தில் சான்றிதழ்கள் கிடைக்கவில்லை உள்ளிட்ட பிரச்னைகளை சரிசெய்ய வேண்டும்.

தீர்வு காண்பாரா பல்கலை வளாகத்திற்குள் யார் வேண்டுமானாலும் வந்து செல்லும் வகையில் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. அலுவலர்கள் சரியான நேரத்திற்கு வருவதில்லை என புகார் உள்ளது. முடங்கிக் கிடக்கும் பயோமெட்ரிக் வருகை பதிவு முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். அலுவலர்கள் பதவி உயர்வு தொடர்பான 'பைல்' நிர்வாகப் பிரிவு 1ல் மாதக் கணக்கில் கிடப்பில் உள்ளது.

இதுபோன்ற பிரச்னைகளை 'கோஷ்டி அரசியலுக்கு' இடம் கொடுக்காத வகையில் தீர்வுகாண முத்தையா முன்வர வேண்டும் என்றனர்.






      Dinamalar
      Follow us