/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கருங்காலக்குடியில் ஆக்கிரமிப்பு கண்டுகொள்ளுமா ஊராட்சி
/
கருங்காலக்குடியில் ஆக்கிரமிப்பு கண்டுகொள்ளுமா ஊராட்சி
கருங்காலக்குடியில் ஆக்கிரமிப்பு கண்டுகொள்ளுமா ஊராட்சி
கருங்காலக்குடியில் ஆக்கிரமிப்பு கண்டுகொள்ளுமா ஊராட்சி
ADDED : நவ 28, 2024 05:41 AM
கொட்டாம்பட்டி: கருங்காலக்குடியில் சர்வீஸ் ரோடுகளில்கடைகள்ஆக்கிரமித்துள்ளதால் மக்கள் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கருங்காலக்குடியில் நான்கு வழிச்சாலையின் ஒரு புறம் கிராமமும், மறுபுறம் ஆரம்ப சுகாதார நிலையம், ஆண்கள், பெண்கள் மேல்நிலை பள்ளிகள், 4 அங்கன்வாடி மையங்கள், அரசு கால்நடை மருத்துவமனை, ரேஷன் கடை உள்பட பலவும் உள்ளன. சுற்றுவட்டாரத்தில் உள்ள 17 கிராம மக்கள் தினமும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பல்வேறு அலுவல்கள் காரணமாக கருங்காலக்குடிக்கு வந்து செல்கின்றனர். இவர்களை எதிர்பார்த்து நான்கு வழிச்சாலையின் இருபுறமும் உள்ள சர்வீஸ் ரோடுகளை வியாபாரிகள் ஆக்கிரமித்து கடை விரித்துள்ளனர்.
பொது மக்கள் கூறியதாவது: சர்வீஸ் ரோடுகளில் வியாபாரிகள் பலர் ஆஸ்பெஸ்டாஸ் ஷீட், கொட்டகை அமைத்துள்ளனர். பலர் தள்ளுவண்டியில் வியாபாரம் செய்கின்றனர்.
கடைகளில் வாடிக்கையாளர்கள் குவிவதால், ரோட்டில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியவில்லை. ரோடு குறுகி விட்டது. குறுகிய ரோட்டில் பள்ளி வாகனங்கள், மாணவர்கள், பொதுமக்கள் நடந்து செல்வதால் விபத்து ஏற்படுகிறது. ஆக்கிரமிப்பை அகற்ற ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு கொடுத்தோம். விபத்து அச்சம் நீங்க, கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
ஊராட்சி தலைவர் பீர்முகமது கூறுகையில், ''ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி உயரதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளேன். ஆட்டோ மூலமும் அறிவிப்பு செய்து, ஆக்கிரமிப்பாளர்களுக்கும் நோட்டீஸ் கொடுத்துள்ளேன். தற்போது போக்குவரத்திற்கு இடையூறு என புகார் வந்துள்ளதால் உடனே அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.