/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'செட்' தேர்வு தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்குமா தமிழக அரசு
/
'செட்' தேர்வு தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்குமா தமிழக அரசு
'செட்' தேர்வு தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்குமா தமிழக அரசு
'செட்' தேர்வு தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்குமா தமிழக அரசு
ADDED : ஏப் 04, 2025 08:04 AM
மதுரை: 'தமிழகத்தில் 6 ஆண்டுகளுக்கு பின் நடத்தப்பட்ட 'செட் ' (மாநில தகுதி தேர்வு) தேர்வு தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க வேண்டும்' என தேர்வர்கள் எதிர்பார்க்கின்றனர்.
அரசு, உதவி பெறும் கல்லுாரிகளில் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான கல்வி தகுதியாக யு.ஜி.சி., நடத்தும் நெட், மாநில அரசு நடத்தும் 'செட்' தேர்ச்சி அல்லது பிஎச்.டி., பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்பது விதி.
'நெட்' (தேசிய தகுதி தேர்வு) தேர்வை ஆண்டுக்கு 2 முறை யு.ஜிசி., முறையாக நடத்தி வருகிறது. ஆனால் 'செட்' தேர்வை மாநில அரசு அதுபோல் முறையாக நடத்துவதில்லை. 2018க்கு பின் இந்தாண்டு மார்ச்சில் நடத்தியது. 6 ஆண்டுகளுக்கு பின் நடத்தியதால் அதிக எண்ணிக்கையில் அதாவது 99 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர்.
நெட், செட் தேர்வு எழுதியவர்களில் 6 சதவீதம் மட்டுமே தேர்ச்சியாக அறிவிக்க வேண்டும் என்பதும் விதி. 'செட்' தேர்வை ஆண்டுக்கு 2 முறை நடத்தியிருந்தால் ஒவ்வொரு முறையும் 6 சதவீதம் பேருக்கு தேர்ச்சி வாய்ப்பு கிட்டியிருக்கும். தமிழகத்தில் 6 ஆண்டுகளுக்கு பின் செட் தேர்வு நடத்தியதால் அதற்கு ஏற்ப தேர்ச்சி விகிதத்தை 6 சதவீதம் என்பதில் இருந்து அதிகரித்து அறிவிக்க வேண்டும். அப்போது தான் காத்திருப்போரில் பயன்பெறுவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்க முடியும்.
இதுகுறித்து செட் தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருப்போர் கூறியதாவது:
தமிழக அரசு 2024ல் காலியாக உள்ள 7 ஆயிரம் உதவி பேராசிரியர் காலியிடங்களில் 4 ஆயிரம் நிரந்தர பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான தேர்வை எழுதியவர்களில் வழக்கம் போல் 6 சதவீதம் தேர்ச்சி அறிவித்தால் பலர் பாதிப்பர். ஏற்கனவே 2017 ல் நடந்த தேர்வில், அதற்கு முன் 6 ஆண்டுகளாக செட் தேர்வு நடத்தாததை யு.ஜி.சி.க்கு தெரிவித்து 6 சதவீதம் என்பதில் தளர்வு பெற்று 17 சதவீதமாக தேர்ச்சி அறிவிக்கப்பட்டது.
அதுபோல் இந்தாண்டும் யு.ஜி.சி., யிடம் சிறப்பு தளர்வு பெற்று தேர்ச்சி வீதத்தை அதிகரித்து வெளியிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

