/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மண்ணாடிமங்கலத்தில் ஊருணி சீரமைக்கப்படுமா
/
மண்ணாடிமங்கலத்தில் ஊருணி சீரமைக்கப்படுமா
ADDED : ஜன 08, 2026 05:59 AM

சோழவந்தான்: 'சோழவந்தான் அருகே மண்ணாடிமங்கலம் தாமரைகுளத்தை சீரமைக்க வேண்டும்' என, அப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.
அப்பகுதி. நாகராஜ் கூறியதாவது: இங்கு தாமோதரன்பட்டி ரோட்டருகே தாமரைக்குளம் உள்ளது. சுற்றுவட்டார கிணறு, நிலத்தடி நீர்மட்ட உயர்வுக்கு ஆதாரமாகவும், விவசாயம், ஈமக் கிரியைகள் செய்யவும் பயன்படுகிறது. முன்பு மக்கள் குளிப்பதற்கு பயன்படுத்தி வந்தனர்.
இதன் கரையில்குப்பை கொட்டப்பட்டும், ஆகாயத்தாமரைகள் நிறைந்தும் சீரழிந்து வருகிறது. பல ஆண்டுகளாக குப்பைகொட்டப்பட்டதால் குளத்தின் ஒரு பகுதி மண்ணால் மூடப்பட்டுவிட்டது. இந்நிலை தொடர்ந்தால் ஊருணி மேலும் சுருங்கும் அபாயம் உள்ளது.
அணைப்பட்டி ரோட்டில் சமுதாய கிணறு அருகே குப்பைக் கிடங்கு அமைத்து இங்கேயும் கொட்டுகின்றனர். மேலும் குப்பை, ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்பாலும் தண்ணீர் மாசடைகிறது.
தண்ணீர் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு நிலவுகிறது. நீரின் நிறம் கருப்பாகி கழிவுநீராக மாறும் அபாயம் உள்ளது. அதிகாரிகளிடம் எடுத்துக் கூறியும் பலனில்லை. மாவட்ட நிர்வாகம் குளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

