ADDED : பிப் 22, 2026 05:49 AM
அ நிறம் | அளவு
சோழவந்தான்: சோழவந்தான் அருகே வடகாடுபட்டியில் குடிநீர் தொட்டியில் வெளியேறும் கழிவுநீர் செல் வதற்கு வடிகால் வசதி செய்து தர வேண்டுமென அப்பகுதியி னர் கோரிக்கை விடுத்தனர்.
பெருமாள்கோயில் தெருவில் ரேஷன்கடை பின்புறம் குடிநீர் தொட்டி உள்ளது.
பொதுசுகாதாரம், கால்நடைகளின் குடிநீர் தேவை உள்ளிட்டவற்றிற்கு பயன்படுகிறது. இந்நிலையில் பயன்படுத்திய, வெளியேறும் உபரிநீர் செல்வதற்கு வடிகால் வசதி செய்யப்படவில்லை.
மேலும் சுற்றிலும் செடி, கொடிகள், மண்அடைத்து தண்ணீர் செல்ல வழியில்லை. இதனால் தொட்டிக்கு அருகே தண்ணீர் தேங்குவதால் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு நிலவுகிறது.கொசுக்கள் உற்பத்தியாகி நோய்கள் பரவும் அபாயமும் உள்ளது.
ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வடிகால் வசதி செய்து தர வேண்டுமென அப்பகுதியினர் வலியுறுத்துகின்றனர்.
