/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஊராட்சி செயலாளர் இல்லாமல் பணிகள் பாதிப்பு
/
ஊராட்சி செயலாளர் இல்லாமல் பணிகள் பாதிப்பு
ADDED : பிப் 18, 2024 01:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்: பேரையூர் தாலுகாவில் செயலாளர்கள் இல்லாமல் ஊராட்சிகளில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
சேடப்பட்டி ஒன்றியத்தில் 31 ஊராட்சிகள் உள்ளன. இதில் தாடையம்பட்டி, பாப்பநாயக்கன்பட்டி, வேப்பம்பட்டி, உத்தப்புரம், வண்டபுலி, காளப்பன்பட்டி, சீல்நாயக்கன்பட்டி, முத்துநகையாபுரம் ஊராட்சிகளில் செயலாளர்கள் பல ஆண்டுகளாக இல்லை.
அருகில் உள்ள ஊராட்சி செயலாளர்கள் கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகின்றனர். இதனால் அவர்களுக்கு கூடுதல் சுமை ஏற்படுகிறது. ஊராட்சி தலைவர்களும், மக்களும் சிரமப்படுகின்றனர்.
காலி பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.