ADDED : நவ 23, 2024 05:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி; துாத்துக்குடி மில்லர்புரத்தைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ராணுவவீரர் கனகராஜ் 72, தனது மகனுடன்காரில் தேனி நோக்கி சென்று கொண்டிருந்தார்.
நேற்று மாலை 4:00 மணிக்கு கார் உசிலம்பட்டி பூச்சிபட்டி அருகே சென்ற போது, டிரைவர் சீட்டின் அடியில் இருந்த டயர் வெடித்து பக்கவாட்டில் இழுத்தபடி சென்றது.
ரோட்டோரம் நின்றுஇருந்த மீனாட்சி 60, என்பவரை இடித்துவிட்டு அருகிலிருந்த மின்கம்பத்தில்மோதி நின்றது.இதில்மீனாட்சி உயிரிழந்தார்.காரில் வந்தவர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். உசிலம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.