/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
உசிலம்பட்டி கடைத்தெருவில் உருவான பள்ளம்: பெண் உயிர் தப்பினார்
/
உசிலம்பட்டி கடைத்தெருவில் உருவான பள்ளம்: பெண் உயிர் தப்பினார்
உசிலம்பட்டி கடைத்தெருவில் உருவான பள்ளம்: பெண் உயிர் தப்பினார்
உசிலம்பட்டி கடைத்தெருவில் உருவான பள்ளம்: பெண் உயிர் தப்பினார்
ADDED : நவ 27, 2025 05:33 AM

உசிலம்பட்டி: உசிலம்பட்டி-பேரையூர் ரோட்டில் பஸ்ஸ்டாண்ட் அருகே அக்ரகாரம் தெருவில் 15 அடி சுற்றளவில் ஏற்பட்ட திடீர் பள்ளத்திற்குள் புதைந்த பெண்ணை அருகில் இருந்தவர்கள் மீட்டனர்.
உசிலம்பட்டியில் பேரையூர் ரோட்டில் அக்ரகாரம் தெரு உள்ளது. இத்தெரு பேரையூர் ரோடு, பஸ்ஸ்டாண்டை இணைக்கும் வகையில் இருந்தது. காலப்போக்கில் பஸ்ஸ்டாண்ட் உள்ளே செல்லும் பாதை அடைக்கப்பட்டது.
இத்தெருவில் உள்ள பலசரக்கு கடைக்கு ஒரு பெண் சென்றார். திடீரென தரையில் இருந்த சிமென்ட் தளத்திற்குள் புதைந்தார். கடையில் இருந்தவர்கள் அந்தப் பெண்ணை வெளியே துாக்கி மீட்டனர்.
அதேநேரம் மேலும் தரைக்குள் புதைகுழி போல் 15 அடி சுற்றளவில் பெரும் பள்ளம் ஏற்பட்டது. பெண்ணை மீட்கச் சென்றவர்களும் பள் ளத்திற்குள் விழுந்து, எழுந்து வெளியேறினர்.
அப்பகுதியைச் சேர்ந்த ராமநாதன் கூறிய தாவது:
இத்தெருவில் கட் டடங்கள் கட்டுவதற்கு 50 ஆண்டு களுக்கு முன்பு இந்த இடத்தில் 20 அடி ஆழ உறைகிணறு இருந்தது. கட்டுமான பணியின்போது அதனை மூடிவிட்டோம். இதன் பின்பு இந்த தெருவின் வழியாக குடிநீர் குழாய் பதித்தனர். குழாயில் உடைப்பு ஏற்பட்டு நீண்டநாட்களாக தரைக்கு அடியில் தண்ணீர் வெளியேறி வந்துள்ளது.
இதனால் கிணறு இருந்த பகுதிக்குள் மண் இறங்கி விட்டதால், சிமென்ட் தரைத்தளத்திற்கு கீழே வெற்றிடமாக மாறியுள்ளது. இந்த பெண் சென்ற போது பாரம்தாங்காமல் திடீரென தளம் உடைந்தது. குழாயில் ஏற்பட்டிருந்த உடைப்பு வழியாக தண்ணீர் பீய்ச்சியடித்தது. நகராட்சி பொறியாளர் உள்பட அலுவலர்கள் வந்து தண்ணீரை அடைத்தனர். இந்த திடீர் பள்ளத்தை சரிசெய்ய ஏற்பாடு செய்து உள்ளனர் என்றார்.

