/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மகளிர் உரிமைத் தொகை கேட்டு 30 ஆயிரம் மனுக்கள்; கடனுதவி கோரும் பெண்கள்

ADDED : ஜூலை 30, 2025 06:47 AM
மதுரை; மதுரை மாவட்டத்தில் நடந்த 59 முகாம்களில் 29 ஆயிரத்து 749 பேர் மகளிர் உரிமைத் தொகைக்காக மனுச் செய்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் ஜூலை 15 முதல் உங்களுடன் ஸ்டாலின் முகாம் துவங்கி நடந்து வருகிறது. ஜூலை 29 வரை நடந்த 11 நாட்களில் நகர்பகுதியில் 22 முகாம்கள், ஊரக பகுதியில் 37 முகாம்கள் நடந்துள்ளன. இதில் மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்களே அதிகம் உள்ளன.
பொதுவான சேவைகளுக்காக 59 முகாம்களிலும் மொத்தம் 24 ஆயிரத்து 595 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அதேசமயம் மகளிர் உரிமைத் தொகை கேட்டு விண்ணப்பித்தோரின் மனுக்கள் மட்டும் நகரப்பகுதியில் 14 ஆயிரத்து 68, கிராமப் பகுதியில் 15 ஆயிரத்து 681 மனுக்கள் என மொத்தம் 29 ஆயிரத்து 749 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
மகளிர் சுயஉதவி குழுக்கள் மூலம் கடனுதவி பெறுவதற்கும் விண்ணப்பித்து வருகின்றனர். ஆலாத்துார் சாந்தா கூறுகையில், ''கூலி வேலை செய்கிறேன். தினமும் வேலைக்கு செல்வதால் மகளிர் குழுமூலம் கடனுதவி பெற சிரமமாக இருந்தது. முகாம் மூலம் கடனுதவிக்கு மனுஅளித்தேன். அரசே மக்களை தேடி வந்து திட்டம் வழங்குவது மகிழ்ச்சி'' என்றார்.