ADDED : மார் 10, 2024 03:59 AM
அ நிறம் | அளவு
மதுரை மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரியில் சர்வதேச மகளிர் தினவிழா பெண்கள் ஆற்றல்சார் அமைப்பு சார்பில் கொண்டாடப்பட்டது.
முதல்வர் சுஜாதா பேசுகையில், அனைத்து துறைகளிலும் பெண்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். இந்த மாற்றம் போராட்டங்கள் மூலமே கிடைத்தது. பெண்கள் சமூகத்தில் ஒப்பற்ற பணிகளை செய்து வருகின்றனர். அவர்கள் எதிர்காலத்தைத் தீர்மானிக்கக் கூடிய வலிமை பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்றார்.உதவி பேராசிரியை ஸ்ரீதேவி வரவேற்றார். டீன் பிரியா, துணை முதல்வர் குருபாஸ்கர் பேசினர். ராமச்சந்திரா மெஷின் மற்றும் ஹார்ட் புல்னஸ் கல்வி அறக்கட்டளை குழுமம் இணைந்து கல்லுாரிக்கு நினைவு பரிசு வழங்கியது. அமைப்பு ஒருங்கிணைப்பாளர் கீதா நன்றி கூறினார்.
