ADDED : மார் 10, 2026 06:04 AM
அ நிறம் | அளவு
எழுமலை: மல்லப்புரம் திருவள்ளுவர் கல்வி நிறுவனங்கள் சார்பில் மகளிர் தின விழா கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் செல்வக்குமாரி தலைமையில் நடந்தது. நிர்வாக அலுவலர் சந்திரன் வரவேற்றார்.
நிறுவனர் ராமகிருஷ்ணன், நிர்வாகிகள் சுப்பிரமணி, பெருமாள், சென்னக்கிருஷ்ணன், லோகநாதன், செல்வராஜ் வாழ்த்துரை வழங்கினர். மகளிர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடத்தினர். கல்வியியல் கல்லுாரி, பாலிடெக்னிக், மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
