ADDED : ஏப் 28, 2025 06:21 AM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரையில் அனைத்து மகளிர் மேம்பாட்டு கழகம் சார்பில் சர்வதேச மகளிர் தினவிழா, புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாநில தலைவர் மஞ்சுளா தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திர பாண்டியன் முன்னிலை வகித்தார். செயலாளர் கவிதா வரவேற்றார்.
மாநில சட்ட ஆலோசகர்கள் செல்வம், ராவணன், அமைப்பாளர் விஜயலட்சுமி, மாநில ஆலோசகர் தங்கத்துரை, மாவட்ட தலைவர் விந்தியா, செயலாளர் உமாமகேஸ்வரி, திண்டுக்கல் நிர்வாகிகள் சக்திதேவி, மஞ்சுளா உட்பட பலர் பங்கேற்றனர். இணைச் செயலாளர் விஜயலட்சுமி நன்றி கூறினார்.
